கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்தது. கொரோனா வைரஸால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். கொரோனாவின் பிடியில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் மும்பையில் உள்ள KEM மருத்துவமனையில், 59 வயதுடைய புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் 14 வயது சிறுமி கோவிட்-19 தொற்றுடன் இறந்தனர். எனினும், மருத்துவர்கள் இருவரின் மரணமும் கோவிட் காரணமாக இல்லை என்று தெளிவுபடுத்தினர். 14 வயது சிறுமி நெஃப்ராடிக் சிண்ட்ரோம் (nephrotic syndrome) என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். மற்றொரு நோயாளி செப்ஸிஸ் (Sepsis) காரணமாக உயிரிழந்தார்.
கோவிட்-19 தொற்றுகள் குறித்து KEM மருத்துவமனை அதிகாரிகள் பேசுகையில், கடந்த இரண்டு மாதங்களில் 15 கோவிட்-19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் லேசான காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்ற அறிகுறிகளுடன் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.
கோவிட்-19 தற்போது அதிகரிப்பதற்கு பயப்படத் தேவையில்லை. வைரஸ்கள் காலப்போக்கில் இடங்கொண்டு நிலையான தொற்றாக மாறுகின்றன. கோமார்பிடிட்டிகளுடன் கூடியவர்களுக்கே இது சிக்கலாக மாறும். ஆனால், தற்போது அத்தகைய தீவிர நிலை இல்லை, என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு குறைவாக இருந்தாலும், கிழக்கு ஆசிய நாடுகளில் புதிதாக தொற்று அதிகரித்து வருகிறது. ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் மீண்டும் தொற்றின் தாக்கத்தை சந்தித்து வருகின்றன. சிங்கப்பூரில் பாதிப்பு எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் ஹாங்காங்கில் ஒரு வாரத்தில் 31 கடுமையான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
ஒரு வாரத்திற்கு முன்பு 11,100 ஆக இருந்த கோவிட் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 14,200 ஆக உயர்ந்துள்ளதால் சிங்கப்பூர் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. தினசரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தோராயமாக 30% அதிகரித்துள்ளது. மறுபுறம், ஹாங்காங்கில் வைரஸ் பரவல் கணிசமாக உயர்ந்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மே 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 31 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது ஒரு வருடத்தில் இல்லாத உச்சமாகும். கொரோனா பரவலின் இந்த திடீர் அதிகரிப்பு ஒரு புதிய மாறுபாட்டின் அச்சத்தைத் தூண்டியுள்ளது.
Read more: ரூ.6,200 கோடி மோசடி: UCO வங்கி முன்னாள் தலைவர் சுபோத் குமார் கோயல் கைது..!!