fbpx

“கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் பாதிப்பில்லை” – அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழ்நாட்டில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழச்சாறு, மோர், இளநீர் வழங்க கூடிய தண்ணீர் பந்தல் மக்கள் பயன்பாட்டிற்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை என தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “எந்த விதமான தடுப்பூசியாக இருந்தாலும் அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை பொறுத்து தான் பின் விளைவுகள் இருக்கும். ரத்தம் உறைதல் மாதிரியான பிரச்னைகள் சிலருக்கு இருக்கலாம்.  ஆனால் இதுவரை அது போன்ற பாதிப்புகள் தமிழகத்தில் இல்லை. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயத்துடனே வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்றார்.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தி தங்கள் உடலில் குறையாத வண்ணம் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.  காலையில் எழுந்து நடப்பது உள்ளிட்ட உடற்பயிற்சிகளை செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை எங்கும் கோவிஷீல்டு தொடர்பான பக்கவிளைவு சம்பந்தமாக எந்த பாதிப்பும் பதிவாகவில்லை” என அவர் கூறினார்.

Next Post

மூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா..! திகைத்து போன கடை உரிமையாளர்கள்.. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை!

Sun May 12 , 2024
கோவை மாவட்டம் முழுவதும் கடைகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 3,100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது கோவை மாவட்ட காவல் துறை மற்றும் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருடன் இணைந்து 23 சிறப்பு குழுக்கள் தமிழக அரசால் அமைக்கப்பட்டு கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அதன்படி 5,568 கடைகளில் திடீர் கூட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது 692 கடைகளில் சுமார் 3098.38 […]

You May Like