பசு கடத்தல் வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் அனுப்ரதா மண்டல் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.
பார்த்தா சாட்டர்ஜியின் சர்ச்சைக்குரிய கைதுக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அனுப்ரதா மண்டலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பசுக் கடத்தல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் அனுப்ரதா மண்டல் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பசுக்கடத்தல் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அனுப்ரதாவுக்கு சிபிஐ அதிகாரிகள் பல முறை சம்மன் அனுப்பி உள்ளனர்.. ஆனால் அவர் ஆஜராகததால் மாடு கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவரை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இன்று காலை 10 மணியளவில் அனுப்ரதாவின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது. இதையடுத்து அனுப்ரதாவை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மேற்கு வங்கத்தின் ஆசிரியர் நியனம ஊழலுக்குப் பிறகு, அம்மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.. இதையடுத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான பசுக் கடத்தல் ஊழல் இரண்டாவது பெரிய ஊழல் ஆகும். சிபிஐ அனுப்ரதாவை காவலில் எடுத்துள்ளது, மேலும் மோசடி தொடர்பாக டிஎம்சி தலைவரிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. அவரது காவலின் காலம் இன்னும் தெரியவில்லை.