fbpx

Crime | ”புருஷனை விட்டு எவன் கூட பேசிட்டு இருக்க”..!! அக்காவை சரமாரியாக வெட்டிக்கொன்ற தம்பி..!!

ஆலங்குளம் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தம்பி அக்காவை சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த செட்டிகுறிச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு சுபாவேணி (21) என்ற மகளும், வேல்முருகன், மகேஸ்வரன், கவுதமன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சுபாவேணி அய்யனார்குளத்தைச் சேர்ந்த அவரது அத்தை மகன் கருப்பசாமி (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். சுபாவேணி தனது கணவர் உறவினருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று மாரியப்பன் மனைவி லட்சுமி தோட்டத்திற்கு சென்றபோது அவருடன் சுபாவேணி தனது குழந்தையுடன் சென்றுள்ளார். அங்கு அவர் தாயுடன் உட்கார்ந்து இருந்தபோது சுபாவேணிக்கு போன் வந்துள்ளது. இதனால் அவர், குழந்தையை தாய் லட்சுமியிடம் கொடுத்து விட்டு கிணற்று அருகில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த தம்பி மகேஸ்வரன், கையில் வைத்திருந்த அரிவாளால் சுபாவேணியை கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சுபாவேணி துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து மகேஸ்வரன் தப்பி ஓடினார். இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், சுபாவேணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மகேஸ்வரனை கைது செய்தனர்.

Read More : Tamilisai Soundararajan | மீண்டும் அரசியலில் குதித்த தமிழிசை..!! மக்களவை தேர்தலில் போட்டியிடும் தொகுதி இதுதான்..!!

Chella

Next Post

Crime | ”என் மனைவியுடன் தொடர்பா”..? நண்பனின் கை, கால்களை கட்டிப் போட்டு கொடூர தாக்குதல்..!!

Mon Mar 18 , 2024
மனைவியின் கள்ளக்காதல் குறித்த சந்தேகத்தில் நண்பனின் கை, கால்களை கட்டிப் போட்டு அடித்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (42). இவரது நெருங்கிய நண்பர் ஐயப்பன். இருவரும் குடும்ப நண்பர்கள். சம்பவத்தன்று ஐயப்பன் குடிபோதையில் முதலில் வீட்டில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பிறகு அங்கிருந்து கிளம்பி, சௌந்தரராஜன் வீட்டிற்கு சென்று “உனக்கும் என் மனைவிக்கும் என்ன தொடர்பு?” என கேட்டுள்ளார். […]

You May Like