fbpx

Crime | ஒரே நேரத்தில் 2 பேருடன்..!! பிளஸ் 2 மாணவியின் அடங்காத ஆசையால் கடைசியில் நேர்ந்த விபரீதம்..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி, ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களை காதலித்து வந்துள்ளார். தன்னுடைய நண்பர்களாக இருந்த சாய்குமார், சூரிய பிரகாஷ் (25) ஆகியோருடன் ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் சாய்குமாரை அந்த மாணவி ரகசியமாக திருமணமும் செய்து கொண்டார்.

ஆனாலும், மற்றொரு காதலனான சூரிய பிரகாசுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். இதற்கிடையே, சாய்குமாருக்கும் மாணவிக்கும் நடைபெற்ற திருமண வீடியோ இணையத்தில் வெளியாகின. இதை பார்த்த சூர்யாபிரகாஷ் கடும் அதிர்ச்சி அடைந்து மாணவியிடம் கேட்க, அவரும் உண்மையை ஒப்புக் கொண்டார். ஏற்கனவே நண்பர்களாக இருந்த சாய்குமார், சூரிய பிரகாஷ் ஆகியோர் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தங்களுக்குள் பேசியுள்ளனர்.

இரண்டு பேரும் அந்த மாணவியின் வீட்டுக்கு சென்று இருவரில் யார் தேவை என்பதை நீயே முடிவு செய்துகொள் என்று கூறிவிட்டு வந்துள்ளனர். தன்னுடைய இரட்டை காதல் நாடகமும், திருமண வீடியோவும் வெளியில் லீக்கானதால், அவமானமடைந்த மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

ஆனால், போலீசார் தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கைது செய்து விடுவார்கள் என்று அஞ்சிய காதலன் சூரிய பிரகாஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவிக்கு தாலி கட்டிய சாய் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாணவிக்காக இரு ஆண்கள் போட்டி போட்டு இரண்டு பேர் தற்கொலை செய்யும் அளவிற்கு சென்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

Income Tax | வருமான வரி தாக்கல்..!! உங்களுக்கு இன்னும் ரீபண்ட் வரவில்லையா..? கடும் நடவடிக்கை..!! ஏன் தெரியுமா..?

Sun Aug 27 , 2023
இந்தியாவில் மாத வருமானம், மற்ற வகைகளில் வருமானம் பெறக்கூடியவர்கள் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் – ஜூலை மாதங்களில் இந்த வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக அவகாசம், நேரம் கொடுக்கப்படும். அந்தவகையில், இந்தாண்டு ஜூலை 31ஆம் தேதி வருமான வரி (Income Tax)செலுத்துவோர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை 31 வரை சுமார் 5.83 […]

You May Like