fbpx

பவுலர்களுக்கு நெருக்கடி!… பேட்ஸ்மேன்களுக்கு சாதகம்!… 2024 ஐபிஎல் தொடரில் புதிய விதி!

2024 ஐபிஎல் தொடரில், ஒரு ஓவரில் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசலாம் என்ற புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று துபாயில் நடைபெறவுள்ளது. மேலும், ஐபிஎல் தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்கி மே இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், 2024 ஐபிஎல் தொடரில் மேலும் ஒரு புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஒரு பவுலர் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் மட்டுமே வீச முடியும். அதாவது ஒரு ஓவரில் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் ப்ளேயர்’ என்ற புதிய விதிமுறையை அமல்படுத்தப்பட்டது. இந்த விதியின் படி ஒரு அணி விளையாடும் போது 11 வீரர்களோடு சேர்த்து மாற்று வீரர்களாக 4 பேரையும் அறிவிக்கவேண்டும்.

போட்டி தொடங்கி 14 ஓவர்கள் முடிவதற்கு முன்பாக, ஒரு வீரை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்து கொண்டு, அணியில் இருக்கும் ஒரு வீரரை வெளியேற்றி விடலாம். இது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகளுக்கும் பொருந்தும். இதனால் கடந்த சீசனில் ஆல்ரவுண்டர்களுக்கான பங்களிப்பு குறைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், தற்போதையை புதிய விதி, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இந்த புதிய விதிமுறை இருப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் இப்போதே குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளனர்.

Kokila

Next Post

ஒரு மாதத்திற்கு 50 கிமீ ஓடினால் போனஸ்..!! ஊழியர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் நிறுவனம்..!!

Tue Dec 19 , 2023
தினசரி ஓடி உடற்பயிற்சி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்கப்படும் என சீன நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. பணியாளர்கள் ஆரோக்கியமாக இருப்பதும், அதன் வாயிலாக திறம்பட பணியாற்றுவதுமே ஒரு நிறுவனம் சிறப்பாக இயங்குவதற்கு அடிப்படையாகும். கடினமாக உழைக்க வேண்டுமென்ற காலம் மலையேறி போயிருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் திறம்பட ஊழியர்கள் உழைப்பதை நிறுவனங்கள் எதிர்பார்க்க ஆரம்பித்திருக்கின்றன. அவ்வாறு உழைப்பதற்கு உடற்தகுதி அடிப்படை அவசியம் என்பதால், பணியாளர்களை உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு ஒரு சீன […]

You May Like