fbpx

“விவசாயிகள் கவனத்திற்கு” பயிர்க் காப்பீட்டு…15 நாள் அவகாசம்… மத்திய அமைச்சர் தகவல்…!

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற விரும்பும் விவசாயிகள், தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும்.

வங்கிகள் / நிதி நிறுவனங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் இந்த இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்யப்படும் என்றார். விவசாயிகள் பதிவு செய்ய காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், பிரீமியம் தொகையை எவ்வாறு செலுத்துவது, விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பிரீமியம் தொகை, காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்துவது உள்ளிட்ட விவரங்களும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். விவசாயிகள் யாரும் விடுபடாத வகையில், அவர்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்காக, வங்கிகளுக்கு கடைசி தேதியிலிருந்து 15 நாள் அவகாசம் அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்

Vignesh

Next Post

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு வேலை..‌! உடனே விண்ணப்பிக்கவும்..‌

Sat Aug 6 , 2022
பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Officer (Fire-safety), Manager (Security) பணிகளுக்கு என 103 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் B.Tech, Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு […]

You May Like