fbpx

85 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது கச்சா எண்ணெய் விலை…

இந்தியாவின்பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும் கச்சா எண்ணெய் விலை 85 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும் கச்சா எண்ணெய் விலை மிகவும் முக்கியம் . கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறுகையில் கச்சா எண்ணெய் விலை இந்தியாவில் 88 டாலருக்கு கீழ் சென்றால் பெட்ரோல் டீசல் மீதான விலை உயர்வை குறைக்க முடியும் எனதெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது 85 டாலருக்கும் கீழ் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்குமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். அல்லது மத்திய அரசு விலை குறைக்க மறுத்து புதிய விளக்கத்தை மழுப்பலாக அளிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

உலகளவில் பணவீக்கம் அதிகரித்து ரூபாயின் மதிப்பு சரிந்தது. பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய வங்கிககள் வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்தது. 2022ம் ஆண்டு முடிவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் ரெசிஷனுக்குள் நுழையும் என பல வகையில் உறுதிப்படுத்தப்பட்டது.

பொருளாதார மந்தநிலையின் அச்சத்தினால் உலகளவில் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிக அளவில் குறைய வாய்ப்புள்ளது. எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 85 டாலர் குறைந்துள்ளது.

Next Post

பெங்களூருவில் இருந்து காணாமல்போன மாணவிகள் மீட்பு …. போலீஸ் கண்டுபிடித்தது எப்படி? ..

Mon Sep 26 , 2022
பெங்களூருவில் இருந்து கடந்த 6ம் தேதி காணாமல் போன பள்ளி மாணவிகள் சென்னையில் இருப்பதை உறுதிசெய்துகொண்டு போலீசார் அவர்களை மீட்டுள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த மாணவி தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றார். இவளது தந்தையின் இரண்டாவது மனைவியை பிடிக்காமல் போனதால் வீட்டைவிட்டு போக முடிவு செய்தால் , இதே போல மற்றொரு மாணவி தனது அம்மாவின் இரண்டாவது கணவரை பிடிக்காமல் போனதால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். மூன்று […]

You May Like