கொல்கத்தாவில் வீடற்ற தம்பதியரின் 7 மாத பச்சிளம் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ஆம் தேதி ஒருவர், தனது வீட்டின் வெளியே நடைபாதையில் தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருப்பதாக புர்டோல்லா காவல் நிலையத்திற்கு ஒருவர் புகாரளித்த நிலையில், இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “குழந்தையின் பெற்றோர் எங்களை அணுகினர். நாங்கள் குழந்தையை ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு குழந்தையின் அந்தரங்க உறுப்புகளுக்கு அருகில் காயங்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடலிலும் பல கீறல் அடையாளங்கள் இருந்தன. பாலியல் வன்கொடுமை குறித்து நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
“குழந்தையை நடைபாதையில் இருந்து தூக்கி எங்கோ அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சில வழிப்பறிக்காரர்களின் செயலாக இருக்கலாம். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்” என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read More : தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் மழை..!! 7 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..!!