fbpx

அந்தரங்க உறுப்பை கல் மூலம் நசுக்கி!… எகிப்தியர்கள் இதை வைத்துதான் ஆண்களின் வீரத்தை கணிப்பார்களாம்!… நடுங்க வைக்கும் பின்னணி!

உலகம் முழுவதும் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் பல்வேறு முறைகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர். சிலரது பழக்கவழக்கங்கள் ஆச்சரியமாகவும், வெறித்தனமாகவும், அதிசயமாகவும் இருக்கும். ஒவ்வொரு சமூகத்தினரிடையே அடையாளமாக விளங்கும் இந்த பழக்கவழக்கங்கள் வெறும் பழக்கங்கள் மட்டுமல்ல அதற்கு பின்னால் பல பின்னணிகளும் இருக்கும். தற்போது மாறிவிட வாழ்க்கை முறையால் இதில் பெரும்பாலான பழக்கங்கள் மறைந்து விட்டது, இருப்பினும் இப்போதும் இதனை பின்பற்றும் மக்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அந்தவகையில், பண்டைய கால எகிப்தியர்கள் நாம் ஆச்சரியப்படும் விதத்தில் மிகவும் வித்தியாசமாக வாழ்த்திருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை முறையில் உள்ள மிகவும் சுவாரஸ்யமான 7 விஷயங்களை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பண்டைய கால எகிப்தியர்கள் ஆண்களை மிக வீரம் உடையவர்களாக என்பதை கணிக்க வித்தியாசமான முறையை பின்பற்றி இருக்கிறார்கள். அதாவது ஆண்களில் அந்தரங்க உறுப்பின் முன் தோலை எடுப்பது. அதை எப்படி செய்வார்கள் என்றால் 150 ஆண்கள் சூழ்ந்து நிற்க்க ஒருவரின் இரண்டு கைகளையும் இறுக பிடிக்க கத்தி எதுவும் பயன்படுத்தாமல் ஒரு கல் வைத்து அந்த பகுதியை நசுக்கி இருந்திருக்கிறார்கள். ஒருவர் இந்த வலியை எவ்வளவு நேரம் பொறுத்து கொள்கிறாரோ அதை வைத்து தான் அவர்களின் வீரத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

அந்த காலத்தில் வாழ்ந்த எகிப்திய பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்ள கோதுமை செடியின் கீழ் சிறுநீர் கழித்திருக்கிறார்கள். அப்போது அந்த செடி நன்கு வளர்ந்தது என்றால் அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். ஒருவேளை அந்த செடி பட்டு போனது என்றால் அவர்கள் கர்ப்பமாக இல்லை என்று அர்த்தமாம். இதை ஆராய்ச்சி செய்து பார்த்த நிபுணர்கள் கூட இதனை உண்மை என்றே சொல்லி இருக்கிறர்கள்.

பாலைவனத்தில் வாழ்ந்த எகிப்தியர்களுக்கு அடிக்கடி அவர்களுடைய கண்களை சுத்தம் செய்ய வேண்டி இருந்தது. இதனால் அவர்கள் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு ஒரு வித்தியாசமான திரவத்தை தயாரித்திருக்கிறார்கள். அதில் சேர்க்கப்பட்ட மூலப் பொருட்கள் தெரிந்தால் உங்களுக்கு வாந்தி வந்து விடும். ஏனென்றால் அவர்கள் தேனுடன் மனித மூளையை சேர்த்து இந்த திரவத்தை தயாரித்திருக்கிறார்கள். உங்கள் கண்களை அழகு படுத்த இப்படி ஒரு திரவத்தை தயாரித்து தந்தால் பயன்படுத்துவீர்களா?

எகிப்தியர்ககளுக்கு உடலில் புருவங்கள் தவிர வேறு எந்த பகுதிகளிலும் முடி வைத்திருப்பது அவர்களுக்கு பிடிப்பதில்லை. அதனால் அவர்கள் தங்கள் முடிகளை முற்றிலும் அகற்றி விட்டு விக் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். வசதி படைத்தவர்கள் மனித முடியினால் செய்த விக்குகளையும், நடுத்தரப்பட்ட மக்கள் ஆட்டின் ரோமங்களை கொண்டு செய்யப்பட்ட விக்குகளையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த நவீன காலத்தில் ஒரு மனைவியை வைத்து சமாளிக்க முடியாத சமயத்தில் 3300 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர் ஒருவர் 108 பெண்களை திருமணம் செய்து 100 குழந்தைகளையும் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்தப்புரத்தில் மனைவிகள் இல்லாத 90க்கும் மேற்பட்ட பெண்களை வைத்திருக்கிறார்.

5000 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த எகிப்தியர்கள் கணக்கில் மிகவும் திறமைமிக்கவர்களாக இருந்திருக்கின்றனர். வருடத்திற்கு 12 மாதங்கள் என்றும் மாதம் 30 நாள்கள் என்றும் நாள்காட்டியை உருவாக்கி இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இப்போது நாம் கோடைகாலம், குளிர்காலம், இலையுதிர்காலம் என காலநிலையை வேறுபடுத்தி வைத்திருப்பதை போல 5000 வருடங்களுக்கு முன்பு பயிரிடுதல், பயிர்வளர்த்தல், அறுவடை என காலநிலையை மூன்றாக வகைப்படுத்தி இருந்திருக்கின்றனர். இந்த காலநிலை படி பயிரிடுதலை இவர்கள் தவறாக செய்து விட்டால் அங்குள்ள பயிர்களை நைல் நதி வெள்ளம் மொத்தமாக இழுத்து சென்று விடுமாம். அதனால் காலநிலையை எந்த தவறுகளும் வராமல் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.

Kokila

Next Post

”பறவை கழிவுகளால் உயிருக்கே ஆபத்து”..!! ”இந்த இடத்தில் யாரும் இருக்காதீங்க”..!! எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்..!!

Mon Sep 25 , 2023
பறவைகள் வளர்ப்பதில் சிலருக்கு ஈடுபாடு உண்டு. சிலர் கிளிகளை வளர்ப்பார்கள். சிலர் மாக்காவ் என்று சொல்லக்கூடிய பஞ்சவர்ண கிளிகளை வளர்ப்பார்கள். இவை விலை உயர்ந்தவை என்று கருதுபவர்கள் கூண்டுகளில் லவ் பேர்ட்ஸ் (Love Birds) வளர்ப்பார்கள். இதெல்லாம் ஒரு ஹாபி. ஆனால், பறவை வளர்ப்பில் ஈடுபாடு கொண்டவர்கள் வெகு நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. அது என்னவென்றால், பறவை வளர்ப்பில் ஆசைப்படும் முன்பு தங்களுக்கு ஆஸ்துமா […]

You May Like