மகாராஷ்டிராவில் உள்ள ஹன்மந்த்வாடி என்ற கிராமத்தில், 63 வயது சிஎஸ்கே ரசிகர் புந்தோபந்த் என்பவரை, ரோஹித் சர்மாவை விமர்சித்தார் என்ற காரணத்தினால், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அவரை தலையில் தாக்கினர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகர்கள் மகாதேவ் ஜான்ஜ்கே (50), சாக் சதாசிவ் (35) ஆகியோர்தான், 63 வயதான பந்தோபந்த் பாபுசே தபிலே என்ற சிஎஸ்கே அணி ஆதரவு ரசிகரை தலையில் தாக்கினர். பலத்த காயம் அடைந்த அவரை, மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், உயிரிழந்தார். சமீபத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்களை குவித்தது. இப்போட்டியை, ஹன்மந்த்வாடி கிராமத்தில், பலர் ஒரே தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
போட்டியை பார்த்துக் கொண்டிருந்த மும்பை ரசிகர்கள் சோகத்தில் இருந்தபோது, அவர்களை 63 வயதான பாந்தேபந்த் என்பவர் தொடர்ந்து கலாய்த்து வந்துள்ளார். இதனை பார்த்த, மும்பை ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், 278 ரன்களை துரத்திக் களமிறங்கிய மும்பை அணியில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தப் பிறகு, பாந்தேபந்த் சத்தமாக சிரித்து, மும்பை ரசிகர்கள் முன் ஆட்டமாடி, நக்கலமாக பேசியக் கொண்டே இருந்துள்ளார். இது, மும்பை ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாந்தேபந்த் தொடர்ந்து, ஆட்டமாடி, ரோஹித்தை விமர்சித்துக் கொண்டே இருந்ததால் பொறுமையை இழந்த மும்பை ரசிகர்கள் மகாதேவ் ஜான்ஜ்கே (50), சாக் சதாசிவ் (35) ஆகியோர் பாந்தேபந்தை தலையில் தாக்கினார்கள். இதனால், நிலைதடுமாறி கீழே விழுந்த பாந்தேபந்த் எழவே இல்லை. பாந்தேபந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் மயக்க நிலையிலேயே இருந்திருக்கிறார். இந்நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்த நிலையில், மும்பை ரசிகர்கள் இருவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.