fbpx

CSK: தல இருக்க பயமேன்!… கேப்டன் பொறுப்பில் எவ்வித அழுத்தத்தையும் உணரவில்லை!… ரசித்து மகிழ்ந்தேன்!… ருதுராஜ் கெய்க்வாட்!

CSK: அணியில் தோனி இருப்பதால் கேப்டன் பொறுப்பில் கூடுதலாக எந்த அழுத்தத்தையும் உணரவில்லை எனவும் ரசித்து மகிழ்ந்தேன் என்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சி தெரித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதல் முறையாக கேப்டன் பதவியை ஏற்ற ருதுராஜ் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

அந்தவகையில், போட்டிக்கு பின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், இந்த போட்டியின் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறோம். இருப்பினும் பந்துவீச்சில் இன்னும் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக கொடுத்திருக்க வேண்டும். பெங்களூர் அணியின் வீரர்கள் இறுதி கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி விட்டனர்.

இந்த போட்டியின் போது டூபிளெஸ்ஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரது விக்கெட்டுகள் அடுத்தடுத்து இரு ஓவர்களில் விழுந்தது தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை நாங்கள் கைப்பற்றவே அடுத்த சில ஓவர்களுக்கு அவர்களை எங்களால் கட்டுக்குள் வைக்க முடிந்தது. அப்படி மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதே இந்த போட்டியின் திருப்புமுனையாக நான் பார்க்கிறேன்.

அதோடு இந்த போட்டியில் நான் கேப்டன்ஷிப் செய்ததை மகிழ்ச்சியுடன் செய்தேன். ஏனெனில் எனக்கு கேப்டன்சி செய்யும்போது கூடுதலான பிரஷர் இருக்காது. ஏற்கனவே நான் இதுபோன்ற தருணங்களை கையாண்டு உள்ளேன். அதுமட்டும் இன்றி ஏற்கனவே உள்ளூர் போட்டிகளில் கேப்டன்சி செய்த அனுபவம் எனக்கு இருக்கிறது. அதோடு தோனியும் எனக்கு பக்கபலமாக அணியில் இருக்கிறார் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Readmore: Dance: விஜய் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட விராட் கோலி!… வைரலாகும் வீடியோ!

Kokila

Next Post

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பம்..!! சென்னை லாட்ஜில் தங்கியிருந்த குற்றவாளிகள்..!! NIA அதிர்ச்சி தகவல்..!!

Sat Mar 23 , 2024
பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பில் வழக்கில் சந்தேகிக்கப்படும் 2 பேர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான சில பொருட்களும் தடயவியல் நிபுணர்கள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இந்த குண்டு சம்பவத்தின் பின்னணியில் பல மர்மங்கள் நீடித்ததால் […]

You May Like