fbpx

IPL 2025-ல் 4 கோடிக்கு எம்எஸ் தோனியை தக்கவைக்கும் CSK? பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு..!!

ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) முந்தைய ஆண்டுகளை விட மிகக் குறைந்த விலையில் எம்எஸ் தோனியைத் தக்க வைத்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்ததில் இருந்து அடுத்த ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது எகிறி விட்டது. அதற்கு காரணம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக நடைபெற இருக்கும் ‘மெகா ஏலம்’ தான். 5 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு என்பது வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமாகவே இருக்கும்.

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்த மெகா ஏலத்திற்கான கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், ஒரு அணி 4 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்ற விதியை மாற்றி 6 முதல் 7 வீரர்கள் வரை தக்கவைத்து கொள்ளலாம் எனும் புதிய விதியை கொண்டு வருமாறு பெரும்பலான அணிகள் பிசிசிஐக்கு கோரிக்கை வைத்தனர். மேலும், அந்த கூட்டத்தில் சிஎஸ்கே அணி மட்டும் “அன்கேப்ட் பிளேயர்” விதியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என அந்த கூட்டத்தில் கோரிக்கை வைத்ததாக ஒரு தகவல் வெளிவந்தது.

இப்படி “அன்கேப்ட் பிளேயர்” விதி மீண்டும் வந்தால், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான எம்.எஸ்.தோனியை “அன்கேப்ட் பிளேயராக” ஏலத்தில் வைக்கலாம் என கூறுகிறார்கள். இதற்கிடையில், சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், ‘அன் கேப்ட் பிளேயர் விதி’ இருக்க வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ உரிமையாளரிடம் கூறியதாக தெரிவித்தார். அவர் கூறுகையில், “அதில்,”எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது – நாங்கள் அதைக் கோரவில்லை – ‘அன் கேப்ட் பிளேயர் விதி’ வைக்கப்படலாம் என்று பிசிசிஐ எங்களிடம் கூறியது. அவ்வளவுதான் – அவர்கள் இன்னும் எதையும் அறிவிக்கவில்லை” என்று கூறியிருக்கிறார். ஒரு வேலை அன் கேப்ட் விதிமுறை வந்தால் தோனியை நிச்சயம் களத்தில் காணலாம் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Read more ; பின்னணி பாடகி பி சுசீலா மருத்துவமனையில் அனுமதி..!! உடல்நிலை குறித்து வெளியான தகவல்..!!

English Summary

CSK To Retain MS Dhoni For Just Rs 4 Crore In IPL 2025? Here’s How Five-time Champions Can Do That

Next Post

Breaking...! தேவநாதனுக்கு சொந்தமான தனியார் தொலைக்காட்சி அலுவலகத்துக்கு சீல்...!

Sun Aug 18 , 2024
Private TV office owned by Devanathan sealed

You May Like