ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன், தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், டைகர் ஷெஃராப் ஆகியோரின் நடன நிகழ்ச்சி சோனு நிகம் மற்றும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் மற்றும் பின்னணி பாடகர் மோகித் சவுகான், நீதி ஆகியோரின் இசை நிகழ்ச்சி என கோலாகல கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.
17ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றிய தோனியின் கேப்டன்ஷிப் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான போட்டியில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது, அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சவுள்ளது.