பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு தரவிருந்த வருகை தள்ளி போனதற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்களின் ட்விட்டர் பகுதியில் பதிவிட்டார்.
இதனை தொடர்ந்து, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இதனை தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து, வழக்கு மீதான விசாரணைக்கு ஆஜரான பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிர்மல்குமார், “பாஜகவின் வேகத்தை இதுபோன்ற திமுக அரசு தொடரும் வழக்குகளால் குறைத்து விட முடியாது என்று தெரிவித்தார்.
மேலும் தி.மு.க அமைச்சர்கள் செய்த முழு ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களை நான் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினரிடம் அளித்துள்ளேன்.” என்று சி.டி.ஆர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.