fbpx

குடி குடியை கெடுக்கும்!… மதுபழக்கத்தில் இருந்து விடுபட உதவும் பாகற்காய் இலை!… உங்களுக்கான பதிவு!

இயற்கையான முறையில் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட வழிகள் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மது அருந்துவதால், இரத்த அழுத்த அளவு திடீரென அதிகரித்து, எடையும் அதிகரிக்கத் தொடங்குகிறது. உயர் இரத்த அழுத்தத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்று குடிப்பழக்கமாகும். நீங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த விரும்பினால் மது அருந்துவதை நிறுத்த வேண்டும். இது உங்கள் உடலை நீண்ட நேரம் ஆரோக்கியமாக வைத்திருக்கும். மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்” ஒருவேளை மது அருந்துவது உங்கள் உடலுக்கு ஆபத்தானது என்று நீங்கள் உணர்ந்தாலும் அந்த பழக்கத்திலிருந்து உங்களால் முற்றிலுமாக வெகுசீக்கிரத்தில் வெளிவரமுடியாது.

எனவே நீங்கள் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி கட்டுப்பாட்டில் வைத்து உங்கள் சிந்தனைகளை வேறு வழியில் செயல்பட்டால் மட்டுமே குடி பழக்கத்தை குறைக்கமுடியும். அதிகப்படியான மதுவை உட்கொள்வதன் மூலம் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகும். மேலும் உங்கள் உடல் பல நோய்களுக்குள்ளாகும். எனவே இதனை தடுக்க வீட்டு வைத்தியத்தில் 4 வழிகளை முயற்சி செய்யலாம். பொதுவாக பாகற்காயை பலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் பாகற்காய் பல ஆண்டுகளாக ஆரோக்கியமான உடலை தக்க வைத்து கொள்ள எல்லா வழிகளிலும் சிறந்த மருந்தாகும். பாகற்காய் இலைகள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.பாகற்காய் இலைகளை அரைத்து அதன் சாறை குடிக்க முடியாவிட்டாலும், அதை மோருடன் சேர்த்து குடிக்கலாம். இப்படி குடிப்பதன் மூலம் மது பழக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுபடலாம்.

கேரட், அன்னாச்சிப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் திராட்சை போன்ற பழங்களை அரைத்து குடித்தால் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடலாம். இதில் குறிப்பாக திராட்சை பழச்சாறு குடிப்பழக்கத்தை மறக்க உதவும்.திராட்சை பழச்சாறு மது பிரியர்களுக்கு மதுவை போல் மதுரமாக இருப்பதால், நீங்கள் அதை எளிதில் மறப்பீர்கள். மேலும் பழச்சாறு தயாரிக்கும் முறை எளிதாக இருப்பதால் நினைத்தவுடனே அருந்த முடியும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது மற்றும் குடி பழக்கத்திலிருந்து விடுபட உதவும்.

துளசி இலை குடிப்பழக்கத்திலிருந்து விடுபட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேன்ற கூறுகள் இருப்பதால், துளசி இலை உங்கள் உடலின் நச்சு தன்மையை குறைக்க உதவும். துளசி இலைகளை தவறாமல் மென்று சாப்பிடுவதன் மூலம் குடிக்க விரும்புவதை குறைக்க முடியும்.செலரி ஒரு அற்புதமான வீடு வைத்தியமாகும். செலரி என்பது செடி வகையிலிருந்து எடுக்கப்படும் சாறு அதனை தண்ணீருடன் கலந்து ஒரு மாதத்திற்கு தினமும் குடித்தால் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடலாம். மேலும் குடிப்பழக்கம் உள்ள நபர் பாதாம் மற்றும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வர குடிப்பழக்கம் குறையும்.

Kokila

Next Post

ஏரிகளில்‌ வண்டல்‌ மண்‌ எடுக்க விவசாயிகளுக்கு மட்டும் அனுமதி...! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு...!

Sat Apr 22 , 2023
சேலம்‌ மாவட்ட விவசாயிகள்‌ அனுமதி பெற்று ஏரிகளில்‌ வண்டல்‌ மண்‌ எடுத்து விவசாயப்‌ பணிகளுக்கு பயன்படுத்திக்‌ கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு சிறு கனிம விதிகளின்படி, பொதுப்பணித்துறை மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ பராமரிப்பில்‌ உள்ள ஏரிகளிலிருந்து விவசாயிகள்‌ விவசாய பணிகளுக்கு வண்டல்‌ மண்‌ எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. சேலம்‌ மாவட்டத்தில்‌ பொதுப்‌ பணித்துறை மற்றும்‌ ஊராட்‌ சிகளின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள […]

You May Like