டிவி சேனல்களுக்கான டிஷ் கட்டணம் 5 முதல் 8 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டனா மூலம் டிவி பார்த்தவர்களை கேபிள் டிவி மூலம் டிவி பார்க்க வைத்தனர். சேட்டிலைட் சேனல்களின் வருகைக்குப் பின் கேபிள் டிவி மட்டுமின்றி, டிஷ் ஆண்டனா மூலம் டிவி சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் பார்த்து மக்கள் ரசிக்கின்றனர். இவை அனைத்திலுமே எஸ்டி மற்றும் எச்டி பேக்கேஜ் முறையில் விரும்பிய சேனல்களை வாடிக்கையாளர்கள் பெற்று பயன்பெற்று வந்தனர்.
இந்நிலையில், டிவி சேனல்களுக்கான டிஷ் கட்டணம் 5 முதல் 8 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஸ்னி ஸ்டார், ஜி, சோனி உள்ளிட்ட பொழுதுபோக்கு மற்றும் கிரிக்கெட் ஒளிபரப்பு சேனல் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு டிஷ் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளது. ஏர்டெல் டிஜிட்டல் ஏற்கனவே கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : ஒரு கிராமத்தையே ஆபாச படத்திற்கு அடிமையாக்கிய எலான் மஸ்க்..!! பெண்களிடம் ஆக்ரோஷத்தை காட்டும் இளைஞர்கள்..!!