ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை 22 ரூபாயாக உயர்த்த தேசிய பேமெண்ட் கார்ப்பரேசன் பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. ஆனால், சந்தையில் இன்னும் அதிகளவு பணம் புழங்கிக் கொண்டிருக்கிறது. சிலர் ரொக்கப் பரிவர்த்தனைகளையே அதிகமாக விரும்புகிறார்கள். இதனால் அவர்கள் ஏடிஎம்களையே நம்பியுள்ளனர். ஆனால், ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் ஒவ்வொரு மாதமும் 5 முறை அதே வங்கியின் ஏடிஎம்மில் இருந்து இலவசமாக பணம் எடுக்கலாம். அதன் பிறகு எடுக்கப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ரூ.21 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தை ரூ.22ஆக அதிகரிக்க தேசிய பேமெண்ட் கார்ப்பரேசன் பரிந்துரை செய்துள்ளது.
எனவே, ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணத்தை உயர்த்துவது குறித்த பரிந்துரையை ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Read More : தொடங்கியது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு..!! ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!