எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, மூத்த வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்து வாட்ஸ் அப் செயலி மூலமாக தங்களுடைய பென்ஷன் ஸ்லீப்களை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் மட்டுமல்லாமல் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களும் வாட்ஸ் அப் மூலமாக வங்கி இருப்பு கணக்கு மற்றும் மினி ஸ்டேட்மெண்ட்டை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு வாடிக்கையாளர்கள் முதலில் 9022680226 என்ற whatsapp எண்ணுக்கு வணக்கம் என்று அனுப்ப வேண்டும். அதன் பிறகு வங்கிக் கணக்கின் இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் அல்லது பென்ஷன் சி போன்ற விவரங்களை கேட்டு தேவையான அனைத்து விவரங்களும் வாட்ஸ் அப் மூலமாகவே உங்களுக்கு வழங்கப்படும் என்று வங்கி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 1800 1234 அல்லது 1800 2100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.