fbpx

சாலையில் ஓட ஓட சரமாரி வெட்டு!!! மதுபோதையில் லாரி டிரைவரிடம் வம்பிழுத்த இருவர்…!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தைவேலு (35) மற்றும் அவரது நண்பர் சரவணன் (35) இருவரும் புத்தாண்டை முன்னிட்டு, வாலாஜாபேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் வேலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அருகே இருக்கும் லாரி எடை மேடை நிலையத்திற்கு அருகில் மது குடித்துவிட்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த ஓட்டுநரிடம் மது போதையில் இருந்த குழந்தைவேலு மற்றும் சரவணன் இருவரும், தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர், அந்த லாரி ஓட்டுநரும் மது போதையில் இருந்ததால் மூவருக்கும் இடையே உச்சகட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்து அந்த லாரி ஓட்டுநர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணன் மற்றும் குழந்தைவேலுவை, சாலையில் ஓட ஓட சரமாரியாக வெட்டி உள்ளார்

இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்துள்ளனர் இதில் சம்பவம் நடந்த இடத்திலேயே குழந்தைவேலு பரிதாபமாக உயிரிழந்தார், பின்னர் அதே இடத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது சரவணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வெளியூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kathir

Next Post

ரத்த வெள்ளத்துடன், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த நபர்!!!

Mon Jan 2 , 2023
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் அஜித் குமார் வயது 28, இவர் நேற்று இரவு மதுபோதையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆரோக்கிய மாதா தெருவில் வந்து கொண்டிருந்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அஜித் குமாரை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்துடன் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடி வந்த அஜித் குமார் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள நத்தம் […]

You May Like