ஆந்திர மாநில பகுதியில் உள்ள விசாகப்பட்டினம் மதுரவாடாவில் கடந்த ஜூன் 2021 முதல் வாடகைதாரர் ஒருவர் தனது மனைவியின் கர்ப்பமாக இருப்பதை காரணம் காட்டி, நிலுவைத் தொகையைச் செலுத்தாமலே தங்கியிருந்த வீட்டைக் காலி செய்துள்ளார்.
பலமுறை வீட்டிற்கு வந்து கேட்டும் உரிமையாளருக்கு பணம் கொடுக்கவில்லை. இவ்வாறு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் உரிமையாளரிடம் இழுத்தடித்து வந்திருக்கிறார் . ஒருவருடம் ஆனபிறகும் வாடகையினை செலுத்தாமலே இருந்ததால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார் வீட்டின் உரிமையாளர்.
இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து பொருட்கள் மற்றும் உடைமைகளை தூக்கி வெளியே வீச முற்பட்டிருக்கிறார். இதனையடுத்து ஒரு வருடத்திற்கு முன்பாக துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலத்திற்கான ஆரம்ப சாட்சியங்களை கண்டுள்ளார். இதனை தொடர்ந்து இவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.