fbpx

CWC 2023: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது நெதர்லாந்து அணி..!

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் போட்டி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்து வருகிறது. நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது அப்காஹனிஸ்தான். அதே போல் இன்று நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது நெதர்லாந்து அணி.

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணியுடனான மிகப்பெரும் வேற்றியை தொடர்ந்து புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியுடன் இன்று தென் ஆப்பிரிக்கா அணி மோதியது. மழை காரணமாக ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சரியாக ஆடாத நிலையில், அணியில் சரிவில் இருந்து மீட்டார் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், அவர் 78 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் இருந்தார். மேலும் வண்டெர்மேர்வ் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆர்யன் தட் 9 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, யான்சென், இங்கிடி தல 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

246 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர் நெதர்லாந்து அணி பந்துவீச்சாளர்கள். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் குயின்டன் டிகாக் 20 ரன்கள், கிளாஸ்ஸன் 28 ரன்கள் மில்லர் அதிகபட்சமாக 43 ரன்கள் என ஆட்டமிழக்க கேசவ் மகாராஜ் இறுதிவரை போராடி 40 ரன்கள் எடுத்து அட்டமிழந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 42.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. நெதர்லாந்து அணி சார்பில் லோகன் வான் பீக் 3 விக்கெட்டுகளையும், டீ லீட்,வான் டெர் மெர்வ், பால் வான் மீகெரென் தல 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனைத்தொடர்ந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் அப்பிரிக்கா அணியை வீழ்த்தி உலக கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது நெதர்லாந்து அணி.

Kathir

Next Post

லியோவுக்கு அடுத்த சிக்கல்...! அனுமதி இன்றி இதை எல்லாம் வைக்க கூடாது...! ரசிகர்கள் அதிர்ச்சி... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Wed Oct 18 , 2023
அனுமதி இன்றி லியோ படத்தின் பேனர்களை வைக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. லியோ படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும். அதேபோல் காலை 9 மணி […]

You May Like