கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் விக்ரம். ரசிகர்களால் ‘சியான்’ விக்ரம் என அழைக்கப்படுகிறார். பாலா இயக்கிய ‘சேது’ படத்தில் ‘சியான்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததால் அவருக்கு சியான் விக்ரம் என பெயர் வந்தது. விக்ரமின் மகன் துருவ், சினிமாவுக்குள் வந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரது தந்தையும் ஒரு நடிகர் தான் என்று பலருக்கும் தெரியாது.
சினிமாவில் வளர்ச்சி அடைந்த நாளில் இருந்து விக்ரமின் முகத்தை மட்டுமே மக்கள் பார்த்து வந்தனர். இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு விக்ரமின் மகனும் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார். விக்ரமின் மகளுக்கு கலைஞரின் கொள்ளு பேரனான மனு ரஞ்சத்திற்கு திருமணம் செய்து வைத்தார். இதைத்தாண்டி, விக்ரம் சினிமாவில் வளர்வதற்கு முன்னர் டப்பிங் செய்து வந்தார் என்பதை அனைவருக்கும் தெரியும். ஆனால், இவரது தந்தையும் ஒரு நடிகர்தான் என்பது உங்களுக்கு தெரியுமா?
விக்ரமின் தந்தை வினோத் ராஜ். தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். கில்லி படத்தில் த்ரிஷாவுக்கு தந்தையாக நடித்திருப்பார். விக்ரமுடன் கந்தசாமி படத்திலும் இணைந்து நடித்துள்ளார். இது தவிர திருப்பாச்சி படத்திலும் விஜய்க்கு தந்தையாக நடித்திருக்கிறார். ஆனால், இவர் கடந்த 2017ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
Read More : Annapoorna Scheme | சுயதொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடனுதவி..!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!