fbpx

உங்க போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா?… கண்டுபிடிக்க ஈஸியான வழி! அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்!…

ஸ்மார்ட்போன்களை இயக்கும் அதிநவீன தொழில்நுட்பம், அது ஆண்ட்ராய்டு அல்லது iOS ஆக இருந்தாலும், பெரும்பாலும் ஹேக்கிங்கில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வகையிலேயே வடிவமைக்கப்படுகிறது. இருப்பினும் ஹேக்கர்கள் மற்றும் ஸ்கேமர்கள் உங்கள் ஸ்மார்ட்போனை ஹேக் செய்ய இன்னும் பல வழிகள் உள்ளன. தவறான இணைப்பைக் கிளிக் செய்வது, தவறான படத்தைத் திறப்பது மற்றும் தவறான இணைப்பைப் பதிவிறக்குவது உங்கள் ஸ்மார்ட்போனில் மால்வேர் அல்லது ஸ்பைவேரைப் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

இந்த நிலையில், தற்போது ஐபோன்களை குறிவைத்து சைபர் தாக்குதல் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, கடந்த 2 நாட்களுக்கு முன் எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பிக்களின் ஆப்பிள் போன்களுக்கு திடீரென ஹேக்கர்கள் டார்கெட் செய்வதாக ஒரு அலர்ட் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், சிவசேனாவின்(உத்தவ் அணி) பிரியங்கா சதுர்வேதி மற்றும் திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எம்பிக்களின் போன்களுக்கு ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை அலர்ட் வந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்தநிலையில் உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து சைபர் கிரைம் வல்லுநர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை விளக்கமளித்துள்ளார். அதில், எந்தப் போனையும் ஹேக் செய்ய முடியாது என்று கூறவே முடியாது. ஆனால், ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு போன் என ஒப்பிட்டால், ஐபோனை ஹேக் செய்வது நிச்சயம் கடினமே. ஆனால், ஆண்ட்ராய்டு போனை சற்று எளிமையாக இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பிருகுகிறது,” என்றார் முரளி.

மேலும்”ஆண்ட்ராய்டு போனை முழுமையாக பரிசோதிக்காமல், சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதா இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆனால், தற்சமயம் என்ன என்ன செயலிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை பார்த்தால், அவற்றில் சம்மந்தம் இல்லாத செயலிகளின் செயல்பாடு கண்டறிந்தால், அவற்றை உடனே நிறுத்தலாம். அவை சைபர் தாக்குதலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவை வைரஸாகக்கூட இருக்கலாம்,” என்றார் முரளி.

உங்களது செல்போன் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக சூடானாலும், உங்கள் போனின் பேட்டரி திடீரென வேகமாக சார்ஜ் இறங்கினாலோ, உங்கள் சென்போனின் பின்னணியில் எதோ செயலி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என சந்தேகிக்கலாம்,” உங்கள் Facebook அல்லது Instagram கணக்குகளில் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு இருந்தால், அது உங்கள் தொலைபேசியில் ஸ்பைவேர் இருப்பதையும் சுட்டிக்காட்டலாம். அப்படி பார்த்தால் உங்கள் கடவுச்சொற்களை மாற்ற வேண்டும்.

குறிப்பாக நீங்கள் அடையாளம் காணாத பயன்பாடுகளில் இருந்து – செய்தியை கண்டால் கிளிக் செய்ய வேண்டாம். இது ஆட்வேர் மூலம் ஃபோன் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். சில ஆப்ஸை நீங்கள் அடையாளம் காணவில்லையா என்பதைப் பார்க்க, ஆப்ஸ் பட்டியலுக்குச் செல்லவும். அங்கு உங்கள் கவனத்துக்கு வராத செயலிகள் இருந்தால் அவை தான் ஸ்பைவேராக இருக்கலாம். அதிகாரப்பூர்வ பக்கங்களில் இருந்து மட்டும் செயலிகளை பதிவிறக்க வேண்டும்.

உங்கள் கேலரியில் நீங்கள் அடையாளம் காணாத படங்களைப் பார்த்தால், அது ஒரு ரெட் அலர்ட். அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மொபைலில் ஸ்பைவேர் இருப்பதாக நீங்கள் நினைத்தால், ஆப் ஸ்டோர்களில் கிடைக்கும் பல்வேறு ஆப்ஸைப் பயன்படுத்தி உங்கள் சாதனத்தை ஸ்கேன் செய்யவும். உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து ஸ்பைவேரை அகற்றுவதற்கான சிறந்த வழி, சர்வீஸ் சென்டரில் கொடுத்து நீக்குவதே ஆகும்.

Kokila

Next Post

’பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிடா கண்டிப்பா போவேன்’..!! ரேகா நாயர் ஓபன் டாக்..!!

Fri Nov 3 , 2023
பிரபல சர்ச்சைக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர், விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் நடிகை ரேகா […]

You May Like