fbpx

பிரபல பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் வழக்குப்பதிவு..!! நடந்தது என்ன..?

கோவை சேர்ந்த சர்மிளா என்ற இளம்பெண் கடந்த வருடம் தனியார் பேருந்தை இயக்கி வந்தார். பேருந்து ஓட்டுநராக இருந்த ஷர்மிளா சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானார். இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சர்மிளாவை, காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி தட்டிக்கேட்டுள்ளார். தட்டிகேட்டபோது போக்குவரத்து எஸ்.ஐ. ராஜேஸ்வரியை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக சர்மிளா மீது புகார் அளிக்கப்பட்டது.

அதாவது, காந்திபுரம் அருகே போக்குவரத்து காவலரை சர்மிளா, அவரது காரில் அமர்ந்தபடி, செல்போனில் படம் பிடித்து காவலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்த பெண் காவலர் வாகனங்களை வழிமறித்து பணம் வாங்குவதாகவும், அபராதம் விதிப்பதாக கூறி பணத்தை வாங்கிவிட்டு, அபராதம் விதிக்கவில்லை என்று ஒரு நிமிடம் அளவிலான வீடியோவை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் குறித்து, தவறான தகவல்களை பதிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

காவல் உதவி ஆய்வாளரின் புகாரையடுத்து, 3 பிரிவுகளில் சர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது சர்மிளாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனியார் பேருந்தை இயக்கி கொண்டிருந்த போது ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக அவர் வெளியேறினார். பிறகு கமல்ஹாசன் சர்மிளாவுக்கு கார் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

"தயவு செய்து உதவுங்கள்.."! அமெரிக்காவில் உயிருக்கு போராடும் இந்திய மாணவர்..!! மத்திய அரசுக்கு மனைவியின் உருக்கமான கடிதம்.!

Wed Feb 7 , 2024
ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் அமெரிக்காவில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தனது உயிரை காப்பாற்ற வேண்டி, அந்த மாணவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது . தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் இந்தியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த இவரை […]

You May Like