தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் ஜூன் 7-ம் தேதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று முதல் ஜூன் 7ம் தேதி வரை தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு சூறாவளி சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவாகலாம் என்றும் குறிப்பாக, அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மும்பை மற்றும் கொங்கன் பகுதி உள்ளிட்ட மகாராஷ்டிராவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, அது புயலாக உருவானால், அதற்கு “பைபர்ஜோய் புயல்” என்று பெயர் வைக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.