fbpx

தீவிரம் காட்டும் ஃபெஞ்சல் புயல்..!! சென்னை விமான நிலையம் மூடல்..!! இந்த சுரங்கப்பாதை வழியாக போகாதீங்க..!!

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்க நாளை அதிகாலை வரை கூட ஆகலாம் என்றும் புயல் கடற்கரை அருகே மையம் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை – புதுச்சேரி இடையே மரக்காணம் – மாமல்லபுரம் அருகே புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையம் பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை மூடப்படுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், சென்னையில் உள்ள 6 சுரங்கப்பாதைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. அதன்படி கெங்கு ரெட்டி, ரங்கராஜபுரம் – வீலர், பழவந்தாங்கல், ஆர்பிஐ சுரங்கப்பாதை, பெரம்பூர், அஜாக்ஸ் ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

அதேபோல், நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று 385 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 449 கனஅடியாக அதிகரித்துள்ளது. கனமழை தொடர்ந்தால், இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : புதருக்குள் இழுத்துச் சென்று இளம்பெண் கூட்டு பலாத்காரம்..!! பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவி தாக்கிய கொடூரம்..!!

English Summary

An official announcement has been made that Chennai Airport will be closed from 12 noon to 7 pm in response to Cyclone Fennel.

Chella

Next Post

”சென்னையில் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை”..!! ”அப்படி இருந்தாலும் சமாளிப்போம்”..!! முதல்வர் முக.ஸ்டாலின் பேட்டி..!!

Sat Nov 30 , 2024
Chief Minister M.K. Stalin inspected the precautionary measures for Cyclone Fenchal at the State Control Room in Ezhilakam, Chennai.

You May Like