fbpx

#Cyclone : வங்கக்கடலில் 16-ஆம் தேதி புதிய புயல்? மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!!!

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாக கடல் சீற்றத்துடனேயே இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரில் மிதமான மழை பெய்யக்கூடும் – அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இன்று மற்றும் நாளை லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய புயல்: வங்கக்கடலில் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும், இது அடுத்தகட்டமாக புயலாக மாறுமா? என்பது குறித்த அதிகாரபூர்வ தகவலை அதன் நகர்வை பொறுத்துதான் தெரிவிக்க முடியும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போதைய கணிப்பின்படி, இது புயலாக மாறி, இலங்கை மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும், அந்த நேரத்தில் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு புயல் உருவாகும் பட்சத்தில், ஏமன் நாடு ஏற்கனவே பரிந்துரைத்து இருக்கும் ‘மோகா’ என்ற பெயர் சூட்டப்படும்.

Kathir

Next Post

இளைஞர்களே சூப்பர் வாய்ப்பு..!! இன்று வேலைவாய்ப்புக்கான மாபெரும் முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Mon Dec 12 , 2022
நாடு முழுவதும், இன்று 197 மாவட்டங்களில் தொழில்பழகுனர் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. மத்திய அரசின் திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் சார்பில் தேசிய தொழில் பழகுனர் முகாம் இன்று (டிசம்பர் 12) 197 இடங்களில் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் பங்கேற்க பல உள்ளூர் நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. அவை இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியை வழங்கி, அவர்கள் தங்களது வாழ்க்கையை சிறப்பாக அமைக்கும் வாய்ப்பை வழங்கும். முகாம்களில் பங்கேற்க விரும்புவோர் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற […]

You May Like