fbpx

தேஜ் புயல்!… ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!… நாளை தீவிர புயலாக வலுப்பெறும்!

அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கி கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை பெய்து வந்த தென் மேற்கு பருவமழை கடந்த 19ம் தேதியுடன் விடைபெற்றது. இதையடுத்து, அடுத்த 3 நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும். தற்போது அரபிக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு தேஜ் என இந்தியா பரிந்துரைத்த பெயர் சூட்டப்படும். இந்தாண்டு ஏற்கனவே மே மாதம் வங்கக்கடலில் போக்கா புயலும், ஜூனில் அரபிக் கடலில் பிபோர் ஜாய் புயலும் உருவானது. தென்மேற்கு, அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகரும். வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்றும் அடுத்த 12 மணி நேரத்தில் இது புயலாகவும், 22ஆம் தேதி தீவிர புயலாகவும் வலுக்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் அக்.24ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 25ஆம் தேதி முதல் அக்.26 ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 – 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 – 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

நவராத்திரி 7ம் நாள் திருவிழா!… தைரியத்தை தாராளமாக தரும் சரஸ்வதி தேவி!

Sat Oct 21 , 2023
முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும் (ஒருநாளும் தளர்வு அறியா மனம்) வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் […]

You May Like