fbpx

இன்னும் 4 நாட்களுக்கு சூறாவளிக்காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..

வரும் 16-ம் தேதி வரை சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகம்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 14,15 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

வரும் 16-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்..

13,14,15,16 ஆகிய தேதிகளில் கர்நாடகா கடலோரப்‌ பகுதிகள்‌, மத்திய அரபிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல்‌ பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த சூறாவளிக்காற்று 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. எனவே இந்த நாட்களில் மீனவர்கள்‌ இப்பகுததிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

ஜூலை 24 வரை அனைத்து பள்ளிகளும் மூடல்.. கொரோனா பரவல் அதிகரிப்பால் அரசு உத்தரவு..

Wed Jul 13 , 2022
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதால் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூலை 24 வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மணிப்பூர் அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து, நேர்மறை விகிதம் மாநிலத்தில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதால், மாநிலத்தின் அனைத்து பள்ளிகளும் (அரசு/தனியார்) ஜூலை 24 வரை மூடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக […]

You May Like