fbpx

வரும் 16-ம் தேதி வரை சூறாவளி காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை..

வரும் 16-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழக மாவட்டங்கள்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 13, 14,15, 16 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்கதிற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுஇகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள், கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள், வடக்கு கேரளா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, ஆந்திர கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்‌. எனவே இன்று முதல் வரும் 16ம் தேதி வரை மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

கனியாமூர் மாணவி வழக்கு..! பள்ளி நிர்வாகத்தினர் 5 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

Fri Aug 12 , 2022
கனியாமூர் மாணவி ஸ்ரீமதி வழக்கில் பள்ளி நிர்வாகத்தினர் 5 பேரின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் […]
’கனியாமூர் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதற்கான எந்த ஆதாரமும் இல்லை’..! - ஐகோர்ட்

You May Like