fbpx

Alert: வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும்…! மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை முதல் 7-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இன்று தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

மக்களே...! அடுத்த 3 மாதங்களுக்கு மின் கட்டணம் உயர்வு...! அரசு திடீர் அறிவிப்பு...!

Mon Oct 2 , 2023
மின் கொள்முதல் விலை ஏற்றத்தை ஈடு செய்யும் பொருட்டு, புதுச்சேரியில் ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2023 ஆகிய 3 மாதங்களுக்கு மின் கட்டணம் உயர்வு. கூடுதலாக உயர்த்தப்பட்ட மின் கட்டணம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோவா மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் 2023-24 ஆம் ஆண்டிற்கான […]

You May Like