நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 203 ரூபாயாக எண்ணெய் நிறுவனம் உயர்த்தி உள்ளது. கடந்த மாதம் ரூ.1,695க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது விலை உயர்வு அமலுக்கு வந்த நிலையில் ரூ.1,898-ஆக அதிகரித்து உள்ளது. அதே போல வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றமின்றி,ரூ.918க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்து எல்பிஜி நுகர்வோருக்கும் அதாவது 33 கோடி இணைப்புகளுக்கு எல்பிஜி சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதே போல பிரதமரின் உஜ்வாலாத் திட்ட நுகர்வோர் சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் மானியத்தை தங்கள் வங்கிக் கணக்கில் தொடர்ந்து பெறுவார்கள்.
5 கிலோ ஒரு சிலிண்டர் இணைப்பு – ஒரு இணைப்புக்கு ரூ.1,300 ஆகும். உஜ்வாலா 2.0-ன் தற்போதைய முறைகளின்படி, இலவச எரிவாயு திட்டப் பயனாளிகளுக்கு முதலாவது சிலிண்டர் மற்றும் அடுப்பு இலவசமாக வழங்கப்படும். 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஆண்டுக்கு 12 மறு நிரப்புதல்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுகிறது.