டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.350 உயர்ந்துள்ளது..
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை திருத்தப்படுகின்றன. வீட்டு உபயோகத்திற்கு 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.223 உயர்ந்து, ரூ.2,268க்கு விற்பனையாகிறது.. மேலும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.1,118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களுக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
உள்ளூர் வரிகள் காரணமாக எல்பிஜி சிலிண்டரின் விலை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடும். அந்த வகையில் டெல்லியில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ. 350.50 உயர்ந்து, 2119.50 ஆக உள்ளது.. இந்த விலை உயர்வு இன்று அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
மற்ற நகரங்களில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை எவ்வளவு..?
- புது தில்லி ரூ. 1,103.00
- கொல்கத்தா ரூ. 1,079.00
- மும்பை ரூ. 1,052.50
- குர்கான் ரூ. 1,061.50
- நொய்டா ரூ. 1,050.50
- பெங்களூரு ரூ. 1,055.50
- புவனேஸ்வர் ரூ. 1,079.00
- சண்டிகர் ரூ. 1,112.50
- ஹைதராபாத் ரூ. 1,105.00
- ஜெய்ப்பூர் ரூ. 1,056.50
- லக்னோ ரூ. 1,090.50
- பாட்னா ரூ. 1,201.00
- திருவனந்தபுரம் ரூ. 1,062.00