சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின் இருவரும் விளையாடி வந்தனர். இந்த போட்டியில் சீன வீரர் டிங் லிரனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் உலக சாம்பியன் ஆகியிருக்கிறார்.
14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் சுற்று போட்டியில் டிங்கும் மூன்றாவது சுற்று போட்டிகள் குகேஷூம் வெற்றி பெற்றனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற 4-வது சுற்றிலிருந்து 10-வது சுற்று வரை சமநிலையிலேயே முடிவடைந்தது. இதனையடுத்து, 11-வது சுற்று வரும் சிறப்பாக விளையாடிய குகேஷ் வெற்றிபெற்றார்.
அதனை தொடர்ந்து அடுத்த சுற்றான 12-வது சுற்றிலும் வெற்றிபெற்றார். அதன்பின் நேற்று நடைபெற்ற 13-வது சுற்றில் இருவரும் தலா 6.5 என்ற புள்ளியை பெற்றுக்கொண்ட நிலையில், 13-வது சுற்றுமே சமநிலையில் தான் முடிந்தது. எனவே, இருவரும் சமநிலையான புள்ளிகளை பெற்றுள்ள காரணத்தால் 14-வது சுற்றில் வெற்றிபெறுபவர் தான் வெற்றியாளர் எனவும் நேற்று கூறப்பட்டது.
இந்த நிலையில், 14ஆவது சுற்றில் டிங்லீரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் உலக சாம்பியனான மிக இளம் வயது வீரர் எனும் பெருமையை குகேஷ் பெற்றிருக்கிறார். 18 வயதான தமிழக வீரர் குகேஷ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Read more ; Seeman | சீமான் சென்ற விமானம்.. தரையிரங்க முடியமல் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு..!! என்ன ஆச்சு?