fbpx

’அப்பா யாரோ என் பின்னாடியே வர்றாங்க’..!! நர்சிங் மாணவியை காரில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்..!!

மாணவி ஒருவர் தேனியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், உத்தமபாளையத்தில் இருந்து தேனிக்கு பேருந்தில் வந்துள்ளார். அப்போது, அவரை கருப்பு உடை அணிந்த பெண் ஒருவர் பின் தொடர்வதாக, தனது தந்தைக்கு ஃபோன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மாணவியின் தொலைபேசி எண் சிறிது நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பயந்துபோன மாணவியின் தந்தை உடனே தேனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு அளித்துள்ளார். பின்பு பழைய பேருந்து நிலையம் அருகே வந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மாணவியை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், மாணவியை அதே காரில் திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே இறக்கி விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் முருகேஸ்வரி மாணவியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்நிலையில், தேனி டவுன் காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி தலைமையிலான 4 பேர் கொண்ட குழு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், திடீரென பாதிக்கப்பட்ட மாணவிக்கு வலிப்பு ஏற்பட, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், தற்போது திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு எண் 16/24 என்ற அடிப்படையில், இரண்டு பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றும் தேனி டவுன் காவல்துறையினர் இணைந்து பாதிக்கப்பட்ட மாணவி சென்ற இடங்களில் செல்போன் டவர், சிசிடிவி கேமரா ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி கேரளாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : இளம்பெண்களுடன் நிர்வாண வீடியோ கால்..!! ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்த இளைஞர்..!! கடைசியில் வைத்த ட்விஸ்ட்..!!

English Summary

When she came near the old bus stand, unidentified persons abducted the girl in a car and gang-raped her.

Chella

Next Post

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களே..!! இனி அனுமதியின்றி இதையெல்லாம் செய்யக் கூடாது..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

Sat Sep 28 , 2024
The Tamil Nadu Government has published the provisions of the Apartment Owners Protection Act.

You May Like