இன்றைய காலகட்டத்தில், உடல் எடையை குறைப்பது ஒவ்வொருவருக்கும் சாவாலான காரியம். உண்மையில், எடையைக் குறைக்க உடற்பயிற்சியோ அல்லது உணவில் கட்டுப்பாடாக இருப்பதோ தேவையில்லை. அதற்கு பதிலாக உங்கள் உணவில் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலமும், வழக்கமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம்.
ஆரஞ்சு: வைட்டமின் சி நிறைந்த இந்த பழம், கோடை காலத்தில் எடை இழப்புக்கு ஒரு நல்ல வழியாகும். இது எடையைக் குறைப்பது மட்டுமின்றி, ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. ஏனென்றால், இதில் கலோரிகள் மற்றும் சர்க்கரை மிகவும் குறைவாக உள்ளது.
கிவி: கிவியில் மிகக் குறைந்த அளவு சர்க்கரையும், அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது இதயம் மற்றும் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும், கிவி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தர்பூசணி: இந்த கோடையில் உடல் எடையை குறைக்க நீங்கள் விரும்பினால், இந்த பழத்தை சாப்பிடுங்கள். உடல் பருமனை குறைப்பதில் தர்பூசணி முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், கலோரிகள் மற்றும் சர்க்கரை மற்றும் நிறைய தண்ணீர் உள்ளது. நீர்ச்சத்து நிறைந்த இப்பழத்தில் நார்ச்சத்தும் அதிகம். இதை சாப்பிட்டால் வயிறு நிரம்பி இருக்கும். பசியை தூண்டாது. இதனால் உடல் எடை குறையும்.
வெள்ளரிக்காய்: கோடையில் இது மிக எளிதாக கிடைக்கும். இதில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை எளிதில் குறைக்கிறது. கோடையில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் நீரிழப்பு ஏற்படாது.