fbpx

அடடே..!! இனி எல்லாமே மாற்றம்தாம்..!! இவ்வளவு வசதிகளா..? போக்குவரத்துக்கழகம் சூப்பர் முடிவு..!!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக விரைவு பேருந்துகளில் அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சிறப்பாக செயல்பட்டாலும் பேருந்துகள் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் அதிநவீன பேருந்துகள் போக்குவரத்துக்கு பயன்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக நவீன பேருந்துகள் வாங்கப்படுவது குறைவாகவே உள்ளது. கர்நாடகாவில் இருக்கும் அரசு விரைவு பேருந்துகள் வேற லெவல் தரத்தில் உள்ளன. உதாரணமாக கர்நாடகாவின் ஐராவத் போன்ற பேருந்துகள் தனியாரை விட அதிக வசதி கொண்டதாக உள்ளன.

இந்நிலையில்தான் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பாக விரைவு பேருந்துகளில் அதிரடி மாற்றங்களை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் விரைவு போக்குவரத்து பேருந்துகளில் இருக்கும் குறைகளை சரி செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் 200 புதிய படுக்கை மற்றும் இருக்கை வசதி பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளது. பேருந்துகளில் உள்ள வசதி குறைபாடுகளை களைய ஆலோசனைகளை செய்து வருகின்றனர். நேரடியாக பேருந்து ஆர்வலர்கள், மக்களிடம் இருந்து தற்போது உள்ள மாண்புமிகு மேலாண் இயக்குனர் @tnstcbus குழு உள்ளிட்ட சமூக வலைதள வாயிலாக கருத்துகளை பெற முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக @tnstcbus குழு செய்துள்ள போஸ்டில்,

* பேருந்துகளில் தலையணை உடனான படுக்கைகளை அமைத்தல் (Builtin Pillows on Sleeper)

* யூஎஸ்பி சார்ஜர்களுக்கு பதிலாக சாதாரண சார்ஜிங் பாயின்ட்களை அமைத்தல் (Conventional Charging ports Instead of easily damageable USB Charging points)

* எளிதில் அழுக்கடையும் துணியாலான இருக்கைகளுக்கு பதிலாக ரெக்சின் இருக்கைகள் (Rexin seats instead of cloth ones) போன்ற மாற்றங்களை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

* இருக்கைகள், ஜன்னல்கள், வாசிப்பு விளக்குகளின் தரம் உறுதி செய்யப்பட வேண்டும்.

* பேருந்துகளின் உட்பக்கத்தை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, ஜன்னல்கள் மற்றும் திரைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

* பேருந்துகள் செல்லும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

* மாநிலம் முழுவதும் கால அட்டவணை வெளியிடப்பட வேண்டும்.

* அதிக எண்ணிக்கையிலான படுக்கை பேருந்துகள் மீது கவனம் செலுத்த முடிவு எடுக்கப்பட வேண்டும்.

* ஏசி பேருந்துகளை அதிகரிக்க வேண்டும்.

போன்ற மாற்றங்களும் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த மாற்றங்கள் அமலுக்கு வர வாய்ப்புகள் உள்ளன. அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இல்லாமல் மாநில போக்குவரத்து கழகமும் புதிய பேருந்துகளை வாங்க உள்ளன. அதன்படி, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சமீபத்தில் 450 டவுன் பஸ்களை வாங்குவதற்கு டெண்டர் எடுத்துள்ளது.

Chella

Next Post

நேற்று விருது இன்று கைது…..! கருணாநிதி தொடர்பாக அவதூறு பரப்பியதாக பாஜகவின் பெண் ஆதரவாளரை கைது செய்த காவல்துறையினர்…..!

Tue Jun 20 , 2023
கோவையைச் சேர்ந்த உமா கார்க்கி என்ற இளம் பெண் சமூக வலைதளங்களில் பாஜகவிற்கு ஆதரவாக தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் பெரியார் கருணாநிதி தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டோர் தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் வலைதளத்தில் அவதூறாக கருத்துக்களை பதிவிட்டதாக கூறி உமா கார்க்கியின் மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் […]

You May Like