fbpx

திருமண ஊர்வலத்தில் நடனம்.., தட்டிக்கேட்டவர் கொலை!!! வழக்கில் புதிய தீர்ப்பு..!

திருமண ஊர்வலத்தில் நடனம் ஆடியதை தட்டிக்கேட்டவரை கொலை செய்த இருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை குறைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த பாலாஜி, சவுந்தரராஜன் கடந்த 2012ம் ஆண்டு திருமண ஊர்வலத்தில் பங்கேற்று மணமக்கள் முன் நடனம் ஆடியுள்ளனர். இதை அதே ஊரை சேர்ந்த காந்தி என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக சில நாட்களுக்கு பின் தனியே சென்று கொண்டிருந்த காந்தியை வழிமறித்த பாலாஜி மற்றும் சவுந்தரராஜன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றம், இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, கொலை செய்யும் நோக்கத்துடன் கத்தியால் குத்தவில்லை என்பதால் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென குற்றம் சாட்டப்பட்ட இருவர் தரப்பிலும் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பாலாஜிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாகவும், சவுந்தரராஜனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாகவும் குறைத்து தீர்ப்பளித்தனர்.

Kathir

Next Post

துணிவு படத்தில் அஜித் குமாரின் கதாபாத்திரம் பெயர் என்ன? டிவிஸ்ட் வைத்த படக்குழு!...

Fri Dec 30 , 2022
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தின், டிரெய்லர் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் கதாபாத்திரங்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் பொங்கல் வெளியீடுக்கு தயாராகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார் துணிவு திரைப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளிவந்து, மூன்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. […]

You May Like