fbpx

காலநிலை மாற்றத்தால் அபாயம்!… இந்தியாவில் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்!… தமிழ்நாட்டிற்கு கடும் எச்சரிக்கை!

2050ம் ஆண்டில் உலகம் முழுவதும் 2,600க்கு அதிகமான மாநிலங்கள் மற்றும் மாகாணங்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் என்றும் இதன் மூலம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முழுவதும் மனிதர்கள் ஏற்படுத்தும் மாசுக்களால் காலநிலை தொடர்ந்து இயல்பை இழந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காலநிலை மாற்றம் குறித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த Cross Dependency Initiative (XDI) எனும் ஆய்வு நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகும் முதல் 50 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பிடித்திருக்கிறது. 2050ம் ஆண்டில் 2,600க்கு அதிகமான மாநிலங்கள்/மாகாணங்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் என்றும் இதன் மூலம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது. உலகின் முதல் 50 பிராந்தியங்களில் பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட இந்தியாவின் ஒன்பது மாநிலங்கள், காலநிலை மாற்ற அபாயங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயத்தில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, வெள்ளம், காட்டுத் தீ, வெப்ப அலை மற்றும் கடல் மட்ட உயர்வு போன்ற தீவிர வானிலை, காலநிலை மாற்றங்களால், 2050 ஆம் ஆண்டில் மிகவும் ஆபத்தில் இருக்கும் முதல் 50 மாநிலங்கள் மற்றும் மாகாணங்களில் 80 சதவீதம் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மாநிலங்கள் (9) முதல் 50 இடங்களில் உள்ளன, இதில் பீகார் (22 வது இடம்), உத்தரபிரதேசம் (25), அசாம் (28), ராஜஸ்தான் (32), தமிழ்நாடு (36), மகாராஷ்டிரா ( 38, குஜராத் (48), பஞ்சாப் (50) மற்றும் கேரளா (52) என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாநிலங்களில் மேற்குறிப்பிட்ட இயற்கை பேரிடர்களில் ஏதேனும் ஒன்று ஏற்படும் என்றம், இதன் மூலம் மாநிலத்தின் நிலையான கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

காலநிலை அபாயத்தில் அஸ்ஸாம் 1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2050 ஆம் ஆண்டில் 330 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் இந்த ஆய்வின்படி இயற்கை பேரிடர்கள் ஏற்பட 2050ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு முன்னரே பேரிடர் ஏற்படலாம். இதற்கான உதாரணம்தான் பாகிஸ்தானின் சிந்து மாநிலம். இந்த மாநிலமும் முதல் 100 இடங்களில் இடம்பெற்றிருக்கிறது. ஜூன் மற்றும் ஆகஸ்ட் 2022 க்கு இடையில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளம் பாகிஸ்தானின் 30 சதவீத பகுதியை பாதித்தது மற்றும் சிந்து மாகாணத்தில் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் பகுதி அல்லது முழுமையாக சேதமடைந்தன.

அமெரிக்காவில், கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் புளோரிடா ஆகிய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும்.முதல் 50 இடங்களில் பல மாகாணங்கள் மற்றும் மாநிலங்களைக் கொண்ட பிற நாடுகளில் பிரேசில், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகியவை அடங்கும்.ஐரோப்பாவில், உயர்தர மாநிலங்கள் லண்டன், மிலன், முனிச் மற்றும் வெனிஸ் நகரங்களை உள்ளடக்கியது. சேத அபாயத்தின் ஒட்டுமொத்த அளவின் அடிப்படையில், மற்றும் ஆபத்து அதிகரிப்பின் அடிப்படையில், காலநிலை மாற்றத்தின் தீவிர வானிலை அதிகரிப்பால் ஆசியா தான் அதிகம் இழக்க நேரிடுகிறது, மேலும் மோசமான காலநிலை மாற்றத்தைத் தடுப்பதன் மூலமும் காலநிலை மீள்திறன் முதலீட்டை துரிதப்படுத்துவதன் மூலமும் அதிகம் பெறுவது ஆசியா ஆகும்.

இந்த அறிக்கை பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். எந்தெந்த மாநிலங்களில் காலநிலை சீராக இருக்கிறது என்பதை முன்கூட்டியே கணிப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு இந்த அறிக்கை பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

கவனம்.‌‌.! 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...!

Tue Feb 21 , 2023
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். ஆணையர்‌, வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறை சென்னை அவர்களின்‌ ஆணைப்படி 8ம்‌ வகுப்பு தேர்ச்சியுடன்‌ தொழிற்பயிற்சி நிலையத்தில்‌ பயிற்சி பெற்று NTC/NAC பெற்றவர்கள்‌ 10ம்‌ வகுப்பு தமிழ் மற்றும்‌ ஆங்கில மொழி பாடங்களில்‌ தேர்ச்சி பெற்றால்‌ 10ம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழும்‌ 10ம்‌ வகுப்பு தேர்ச்சியுடன்‌ […]

You May Like