சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் இந்த லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் என்றும் தகவல் பரவி வருகிறது. அதில், கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்தவுடன், பெயர், கல்வித்தகுதி, வயது உள்ளிட்ட தகவல்கள் கேட்கப்படுகின்றன. இதை பூர்த்தி செய்தால், இலவச லேப்டாப் வழங்கப்படும் என்ற தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், இப்படி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அரசின் கவனத்திற்கு சென்றது. இது குறித்து மத்திய அரசின் செய்தி நிறுவனமான பிஐபி ஃபேக்ட் செக் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்த லிங்க்கை கிளிக் செய்தால், இலவச லேப்டாப் வழங்கப்படும் என்ற செய்தி தவறானதாகும். இது போன்ற செய்திகளை, உங்கள் சுய விவரங்களை தெரிவிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. மேலும், இதுபோன்ற செய்தி குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த தகவலை பலரும், சமூக வலைதளங்களில் பகிர்ந்து எச்சரித்து வருகின்றனர்.