fbpx

தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து கொன்ற மகள்..!! உடலை சூட்கேசில் வைத்து காவல்நிலையம் எடுத்துச் சென்றதால் பரபரப்பு..!!

பெங்களூருவில் தாயை கொலை செய்த மகள், உடல் சூட்கேசில் வைத்து எடுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் என்எஸ்ஆர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சோனாலி சென் (38). இவர் பிசியோதெரபிஸ்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருடைய தாயாரும் (70) அதே குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். தாய்க்கும், மகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல் இருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த சோனாலி சென், தாய் பிவா பவுலுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து தூங்க வைத்து பின்னர் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். உடலை என்ன செய்வது என தெரியாத அவர், உடலை சூட்கேசில் வைத்து மிக்கோ லே அவட் காவல்நிலையம் எடுத்து சென்றார். இரவில் பெண் ஒருவர் சூட்கேசுடன் வந்ததால் அவரிடம் போலீசார் வழக்கமாக விசாரித்தனர். அப்போது தாயை கொலை செய்ததாகவும், உடல் சூட்கேசில் எடுத்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

மாமூல் வாங்கியவர் அண்ணாமலை கடுமையாக சாடிய சி.வி. சண்முகம்

Tue Jun 13 , 2023
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச எந்த தராதரமும் யோக்கிதையும் அண்ணாமலைக்கு இல்லை என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், ”ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது கவுன்சிலராகவோ இல்லாத அண்ணாமலை மீது அவரது சொந்த கட்சிக்காரர்களே ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சமுதாயத்தில் சாராயம் விற்பவர்கள், […]

You May Like