fbpx

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் ஒரு கிரிமினல்..!! பாஜகவுடன் பயங்கர நெருக்கம்..!! விஜய்யின் நிலைமை என்ன ஆகப்போகுதோ..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் தலைவர் விஜய், “எங்களுடைய கட்சியை A டீம், B டீம் என்று சொல்வது, எங்களுக்கென்று ஏதாவது சாயங்களை பூசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. எங்கள் கட்சிக் கொடியில் உள்ள வர்ணங்கள் மட்டும்தான் எங்கள் வர்ணம். அதைத் தாண்டி வேறு யாரும் எந்த வர்ணத்தையும் எங்கள் மீது பூச முடியாது என்று தெரிவித்திருந்தார்.

மேலும் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை விவரித்த விஜய், பாஜக மற்றும் திமுக தான் தங்களின் அரசியல் எதிரிகள் என்றும், அவர்களை எதிர்த்து தான் தங்களின் அரசியல் இருக்கும் என்பதையும் சூசகமாக அறிவித்தார். இந்நிலையில் தான், செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, “தமிழக வெற்றி கழகத்திற்கு துணை முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நானும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஏற்கனவே, தமிழ்நாட்டிற்கு பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளனர். அதேபோல நடிகர் விஜய்யும் தற்போது கட்சி ஆரம்பித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய ஆனந்த் பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் பாஜக தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களுடன் நெருக்கமாக இருப்பதாக தெரிவிக்கின்றன.

இப்படியான ஒருத்தரை எப்படி தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளராக ஏன் நியமித்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மேலும், விஜய் தனது கட்சியை A டீம், B டீம் இல்லை என்று சொல்வது தான் தற்போது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மேலும், விஜயின் தந்தை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்தை ஏற்கனவே ஒரு கிரிமினல் என்று தெரிவித்திருந்தார். அவர் தற்போது நல்லவராக மாறிவிட்டாரா என்று தெரியவில்லை” என கூறினார்.

Read More : ”நீ மெல்ல மெல்ல சாகணும்”..!! ஆசையாக சாப்பிட்ட கணவருக்கு நேர்ந்த சோகம்..!! கள்ளக்காதலனுக்காக மனைவி செய்ததை பாருங்க..!!
 

English Summary

Vijay’s father had already informed the general secretary of Tamil Nadu Vetri Kazhagam that Anand was a criminal.

Chella

Next Post

மாதவிடாய் தள்ளிப்போக மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறீர்களா?. இனி அப்படி செய்யாதீர்கள்!

Tue Oct 29 , 2024
Are you taking pills to delay your period? Don't do that again!

You May Like