fbpx

இறந்தவர்கள் உடல்கள் விரைவில் கொண்டுவர நடவடிக்கை.. நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக குவைத் இந்திய தூதரகம் தகவல்….

கூத்தாநல்லூர் முத்துக்குமார் மற்றும் திருச்சி சின்னமுத்து ஆகியோரின் உடல்களை விரைவில் உடல்களை அனுப்பும் நடைமுறைகள் தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை இது தொடர்பாக வெளிநாட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதையடுத்து அவர்கள் குவைத் தூதரகத்தை அணுகினர்.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தமிழக அரசு , ’’ முதலில் தகவலை மத்திய அரசின் இணையதளத்தில் தமிழக அரசு பதவி செய்யும் .பின்னர் வெளியுறவுத்துறை சார்பில் சம்மந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கான செலவை அங்குள்ள தமிழ் சங்கங்களை ஏற்கும். ஒணம் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் உடல்களை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தது. தற்போது நடைமுறைகளை தொடங்கிவிட்டதாக குவைத் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கூத்தா நல்லூரைச் சேர்ந்த முத்துக்குமாரைப் போல குடும்பத்திற்காக சவுதி அரேபியாவுக்கு சென்றவர் திருச்சி மாவட்டம் காவேரிபாளையத்தை  சேர்ந்த சின்னமுத்து. 4 மாதங்களுக்கு முன் வெல்டர் வேலைக்கு சென்றிருந்தார். கடந்த ஒருவாரமாக அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தத. நண்பர்களின் கேட்டபோது அவர் காணாமல் போய்விட்டதாக கூறியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது நண்பரிடம் கேட்டபோது அவர் வேலையை முடித்து 8 மணிக்கு வரும்போது தருகிறேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக நண்பர் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள் நிவேதாவும் (17) , தாயும் செய்வதறியாது தவித்தனர். அவரது உடலை மீட்டு இங்கு கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்தார்.

கடந்த வாரம் பேசியபோது கூட என் அப்பா நீ நல்லா படி பாப்பா , நீ அக்ரி படிப்பில் நன்றாக படித்து என்னைப் போல நிறைய சம்பளம் வாங்கும் அளவிற்கு உன்னை நான் உருவாக்குவேன் என்றெல்லாம் கூறினாறே இந்நிலையில் இறந்துவிட்டார் என கூறுகின்றார்களே… என கண்ணீர் விட்டார் அவரது மகள். இந்நிலையில் வளைகுடா நாடுகளில் உயிரிழந்தவர்களை திரும்பக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகின்றது. இறப்புக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

Next Post

ஐதராபாத்தை சேர்ந்தவர் சவுதியில் மரணம் …. வேலைக்கு சேரும் முன்பே நடந்த பரிதாபம்….

Tue Sep 13 , 2022
ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றபோது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தின் ஹகிம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் முகமது முஜாகித் (37) . இவர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் துக்கு வேலைக்காக சென்றிருந்தார். இந்நிலையில் அவரது உடல் பிணமாக கண்டெடுக்கபபட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் குடியிருந்தவர்கள் அவரை அடையாளம் கண்டு உடலை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் , அவரை சோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இவர் தமாம் […]

You May Like