உத்தரப் பிரதேசத்தில் காவல்துறை முன்னிலையில் கேங்ஸ்டர் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு இன்று மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடையை விதித்தது. சிறையில் அடைக்கப்பட்ட கேங்ஸ்டர் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் சனிக்கிழமை இரவு மருத்துவர் பரிசோதனைக்காக அரசு கல்லூரி மருத்துவக் கல்லூரிக்கு காவல்துறையினரால் அழைத்துச் சென்றனர்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் கொடி அணிவகுப்பு நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் எம்பி அதிக் அகமது, சகோதரர் அஷ்ரப் ஆகியோரின் கொலையை விசாரிக்க 3 பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை முதல்வர் யோகி அமைத்துள்ளார்.