fbpx

இளநிலை உணவக மேலாண்மை நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 15-ம் தேதி வரை கால அவகாசம்…!

இளநிலை உணவக மேலாண்மை படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; தேசிய உணவக மேலாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் (என்சிஎச்எம்சிடி) இயங்கும் 78 கல்வி மையங்களில் கற்று தரப்படும் பிஎஸ்சி விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகம் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (என்சிஎச்எம் ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வியாண்டுக்கான என்சிஎச்எம் ஜேஇஇ நுழைவுத்தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 16-ல் தொடங்கி பிப்ரவரி 28-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் /exams.nta.ac.in/NCHM/ எனும் இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதுசார்ந்த கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 011-40759000/69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது nchm@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்புகொண்டு உரிய விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Deadline to apply for the Junior Restaurant Management Entrance Exam is March 15th

Vignesh

Next Post

நாள்பட்ட நுரையீரல் சளியையும் உடனே கரைக்கும் வீட்டு வைத்தியம்..!! இந்த பானத்தை குடிச்சி பாருங்க..!! சூப்பர் ரிசல்ட்..!!

Wed Mar 5 , 2025
Try this home remedy to clear chronic mucus from the lungs.

You May Like