Israel: கடந்த வாரம் ஹமாஸுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக என்ன பாதிப்பு என்பது தெரியவில்லை.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போருக்கு மத்தியில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஹமாஸ் அமைப்பினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் கூட்டு முயற்சியால், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசும், அந்நாட்டு பிணைக் கைதிகளை ஹமாஸ் தரப்பும் விடுவித்து வருகின்றன. இந்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் விரைவில் முடிவடைய உள்ளது.
இந்தநிலையில், போர் நிறுத்த உடன்பாட்டுப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடிக்கும் வேளையில் காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டிப்பதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக என்ன பாதிப்பு என்பது தெரியவில்லை. ஆனால், காஸாவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. காஸாவில் எஞ்சியுள்ள பிணையாளிகளை விடுவிக்கும்படி ஹமாஸை நெருக்குவதற்கு இஸ்ரேல் மின்சாரத்தை துண்டித்ததாக கூறப்படுகிறது
இதனால் காஸாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மின்னுற்பத்தி இயந்திரங்கள், சூரியசக்தித் தகடுகள் மூலம் காஸா மக்கள் ஓரளவு சமாளிக்கின்றனர். சென்ற வாரம் காஸாவுக்கான நிவாரணப் பொருள்களைத் தடுத்துவைத்த இஸ்ரேல் இப்போது மின்சாரத்தையும் துண்டித்திருக்கிறது. போரினால் காசா பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது, மேலும் மின்சார விநியோகத்தின் ஒரு பகுதியாக ஜெனரேட்டர்கள் மற்றும் சோலார் பேனல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Readmore: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடக்கம்!. பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றம்!.