யூடியூபர்கள் ஜிபி முத்து மற்றும் TTF வாசன் மேற்கொண்ட ஆபத்தான பைக் பயணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Twin Throttlers என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் TTF வாசன் பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக போடுவது வழக்கம். அதுமட்டுமின்றி, பைக்கில் வேகமாக செல்வது, ஸ்டன்ட் செய்வது, ரேஸ் செய்வது போன்றவற்றை இவர் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். சாலை விதிகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இவர் மீது புகார்கள் உள்ளது.

இந்நிலையில், யூடியூபர் TTF வாசன் ஆபத்தான முறையில் பைக் ஓட்டி சாகசம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. வாகனங்கள் வரும் எதிர்திசையில் கைகளை விட்டு அதிவேகமாக பைக் ஓட்டி ஜிபி முத்துவுடன் இணைந்து அவர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் TTF வாசன் பைக்கை ஓட்ட, பின்னால் அமர்ந்திருந்த ஜிபி முத்து அவர் பாணியில் கதறி உள்ளார்.

இந்த ஆபத்தான அதிவேக பயணத்தின் போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஜி.பி. முத்து ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாலையில் வரும் மற்றவர்களையும் அச்சுறுத்தும் வகையில் வீயூஸ்களை அதிகரிப்பதற்காக இவ்வாறு அதிவேகப் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.