fbpx

“ அன்பு சகோதரர் இபிஎஸ்..” மீண்டும் இணைந்து செயல்பட அழைப்பு… ஓபிஎஸ் பேசியதை கவனிச்சீங்களா..?

அதிமுகவில் மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு ஓ. பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்..

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தொண்டர்களுக்கான இயக்கமாக அதிமுகவை எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.. அவரின் மறைவுக்கு பிறகு 30 ஆண்டுகாலம் அதிமுகவை கட்டி காத்து யாராலும் வெல்ல முடியாத மாபெரும் இயக்கமாக மாற்றினார்..

ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தால் அதிமுகவை எந்த கட்சியாலும் வெல்ல முடியாது.. ஆனால் அதிமுகவில் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கும் போது தான் திமுக ஆளுங்கட்சியாக மாறும் சூழல் இன்றைக்கும் இருந்து வருகிறது..

சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் அசாதாரணமான சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது.. எனினும் கழகம் ஒன்றுபட வேண்டும், மீண்டும் அதிமுக தமிழகத்தை ஆளும் பொறுப்பை ஏற்க வேண்டும்.. அதற்காக வேற்றுமையை மனங்களில் இருந்து அகற்றிவிட்டு அதிமுக ஒன்றுபட வேண்டும்.. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று ஒன்றரை கோடி தொண்டர்களும் விரும்புகின்றனர்..

இதற்கு முன்னால் ஏற்பட்ட கசப்புகளை மனதில் வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு, கட்சியின் ஒற்றுமையே பிரதான கொள்கையாக இருக்க வேண்டும்.. அதிமுகவை பொறுத்தவரை ஜனநாயக ரீதியில் உரிய எதிர்க்கட்சியாக அதை எதிர்த்து குரல் கொடுக்கும் அரசியல் கட்சியாக இருக்கும்.. அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நான்கரை ஆண்டுகாலம் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது அவருடன் முழு ஒத்துழைப்புடன் பயணத்திருக்கிறோம்.. ஒற்றுமையாக இருந்த நிலை மீண்டும் வர வேண்டும் என்பது எங்களின் விருப்பம்.. அதிமுக நலனுக்காக ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கிறோம்.. எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து சிறப்பாக வழிநடத்தினோம்..” என்று தெரிவித்தார்

Maha

Next Post

சசிகலாவும் வரலாம்.. டிடிவி தினகரனும் வரலாம்.. முதன்முறையாக ஓப்பனாக போட்டுடைத்த ஓபிஎஸ்..

Thu Aug 18 , 2022
ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்றும், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், கட்சியின் நலனுக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார்.. ஆனால் மறுபுறம் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.. எடப்பாடி மேல்முறையீடு செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி […]

You May Like