fbpx

“அன்புள்ள வாசா… நீ உண்மையிலேயே ஒரு ஜெம்”..!! காதலை உறுதி செய்த CWC புகழ் ஷாலின் ஜோயா..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷாலின் ஜோயாவும் ஒரு குக்காக இருக்கிறார். டிடிஎஃப் வாசனும், ஷாலின் ஜோயாவும் காதலித்து வருவதாக செய்திகள் பரவிவரும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜோயா தனது இன்ஸ்டாவில் டிடிஎஃப் வாசனை புகழ்ந்து பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில், ”நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர் அவர். அவர் யாரையும் காயப்படுத்தவில்லை. அவர் யாரையும் காயப்படுத்த மாட்டார் என்று எனக்கு தெரியும். இந்த இளம் வயதில், வெளி உலகத்தில் யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை அவர் செய்து வருகிறார். எனக்கு சில நாட்களாகத்தான் அவரைத் தெரியும். அவர் மிகவும் கனிவானவர், அப்பாவி பையன்.

அனைவரும் அவரிடம் அன்பாக இருங்கள். அவருக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை. அவரைப் போன்ற மனிதர்கள் ரொம்ப அபூர்வம். மிகவும் விலைமதிப்பற்றவர். இவரைப் போன்றவர்களை என்ன ஆனாலும் கைவிடக் கூடாது. அன்புள்ள வாசா, நீ உண்மையிலேயே ஒரு ஜெம்” என்று ஜோயா பதிவிட்டுள்ளார். டிடிஎஃப் வாசனும் ஜோயாவும் காதலிப்பதாக இதுவரை வெளிப்படையாக சொல்லாத நிலையில், ஜோயாவின் இந்த பதிவு இவர்களின் காதலை உறுதிப்படுத்தியுள்ளது.

டிடிஎஃப் வாசன் ஏற்கனவே செல் அம் இயக்கத்தில் உருவாகி வரும் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது ஐபிஎல் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராதா ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கருணாகரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைக்கிறார். பான் இந்தியன் படமாக உருவாக உள்ள இந்த படத்தின் 2-வது போஸ்டரும் வெளியாகியுள்ளது. இப்படம் கார் ரேஸ் தொடர்பான படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Read More : மக்களே..!! இந்த தவறை செய்தால் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் மேல கஷ்டம் வரும்..!!

English Summary

While the news is spreading that TDF Vaasan and Shalin Zoya are in love, Zoya has written a post praising TDF fragrance on her Instagram to confirm it.

Chella

Next Post

குழந்தைகளை பெற்றுக்கொண்டே இருக்கும் எலான் மஸ்க்..!! 3 குழந்தைகளுக்கு தாயான ஷிவான் ஜில்லிஸ்..!! இவர் யார் தெரியுமா..?

Mon Jul 1 , 2024
In 2021, Tesla CEO Elon Musk and Shivan Gillies gave birth to their twins, son Strider and daughter Azuri.

You May Like